×

இந்தியன் - 2 படத்திலிருந்து வெளியேறும் முக்கியப் பிரபலம்... இதுதான் காரணமா?

இருபது ஆண்டுகளுக்குப் பின் இயக்குனர் ஷங்கர் - கமல்ஹாசன் இணையும் இந்தியன் - 2 படத்திலிருந்து முக்கியப் பிரபலம் ஒருவர் வெளியேறியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 
 

லைக்கா புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தியன் - 2 படத்தில் கமலுடன் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதையடுத்து ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

ஷூட்டிங் தொடங்குவது தாமதமான நிலையில், படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின்னர், ரத்னவேலுவை படக்குழுவினர் புதிய ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்தனர். தற்போது, அவரும் இந்தப் படத்திலிருந்து விலக முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், வேறு படங்களில் கமிட்டாக முடியவில்லை என்றும், ஷூட்டிங் தொடங்கத் தாமதமாவதால் வேறு ஒரு பெரிய படத்தின் வாய்ப்புக் கிடைத்ததால் ரத்னவேலு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News