×

டி 20 போட்டிகளில்  இரட்டை சதம்… அவர் ஒருவரால்தான் முடியும் – முன்னாள் வீரர் ஆருடம் !

டி 20 போட்டிகளில் இரட்டைசதம் அடிக்க இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவால் மட்டுமே முடியும் என ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

 

ஒருநாள் போட்டிகளிலேயே இரட்டை சதம் அடிக்க முடியுமா என ஏக்கத்தை சச்சின் நிறைவேற்றி வைக்க இப்போது பல வீரர்கள் அதை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்போதைய கேள்வி இருபது ஓவர் போட்டிகளில் யார் முதலில் இரட்டை சதம் அடிக்கப் போகிறார் என்பதுதான்.

இதைப்பற்றி கருத்துக் கூறியுள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் ’ரோஹித் ஷர்மாவுக்குதான் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவரிடம் நல்ல ஸ்ட்ரைக் ரேட் உள்ளது. மேலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்கள் அடிக்கும் திறமை அவரிடம் உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

இதுவரை ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 172 ரன்கள் அடித்ததே டி 20 போட்டிகளில் தனிநபரின் அதிகபட்சமாக ஸ்கோராக உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News