Double occupancy Box office: உற்சாகத்தில் டபுள் ஆக்குபன்சி படக்குழு...முதல் நாள் வசூல் நிலவரம்
தமிழ் சினிமாவில் லாஜில் எல்லாம் தூக்கி எறிந்து ஒரு ஜாலியான ஹாலிவுட் கான்செப்டில் அவ்வபோது ஏதாவது ஒரு படம் வெளிவரும். அந்த வகையில் அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்த சாமி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் டபுள் ஆக்குபன்சி.
பல அண்டுகளாக குழந்தை இல்லாமல் இருக்கும் போஸ் வெங்கட் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்த குழந்தை காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஆணாகவும், மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை பெண்ணாகவும் மாறுகிறது. இதனை கண்ட பெற்றோர்கள் அந்த குழந்தையை வெளியில் விடாமல் வளர்த்துகிறார்கள். குழந்தையும் வளர்ந்து வாலிப வயதை அடைகிறது. ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் விபத்தில் சிக்கி விட தனித்துவிடப்பட்ட அந்த பிள்ளை எப்படி இந்த சமுதாயத்தை எதிர்கொள்கிறது எனபதுதான் இப்படத்தின் கதை. சில லாஜிக் மிரல்களை தவிர்த்து பார்த்தால் ரசிகர்கள் ஜாலியாக திரையரங்குகளில் என்ஜாய் செய்கிறார்கள்.

இந்த நிலையில் டபுள் ஆக்குபன்சி படத்தின் முதல் நாள் வசூஉல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சிறு பட்ஜெட் படம் மற்றும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்ததாலும் முதல் நாளிலேயே இந்தப் படம் வசூலில் நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது. Sacnilk தகவலின் படி படத்தின் 73 காட்சிகள் நடைபெற்ற நிலையில் இந்த படம் முதல் நாளில் 9 லட்சத்தை வசூலித்துள்ளது.
மேலும் படம் குறித்து பாசிடிவ் விமர்சனக்கள் வந்துகொண்டிருப்பதால் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
