Double Occupancy Box office: பட்ஜெட் 6 கோடி வசூல் 70 லட்சம்... டபுள் ஆக்குபன்ஸி நிலைமை இதுதான்

குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் தயாரிப்பில் அஸ்வின் கந்தசாமி என்ற புதிய இயக்குனர் இயக்கியுள்ள படம் டபுள்
 
Double Occupancy box office

குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் தயாரிப்பில் அஸ்வின் கந்தசாமி என்ற புதிய இயக்குனர் இயக்கியுள்ள படம் டபுள் ஆக்குபன்ஸி. சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர்  நடித்துள்ள இந்த படம் கடந்த வெள்ளி அன்று வெளியானது. ஹாலிவுட் படங்களை போன்று ஹீரோ காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலி 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறுவது போன்று  ஃபேண்டஸி கதையை குறிப்பாக ஆண் ரசிகர்களை குறிவைத்து வெளியானது. படம் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பு இருந்தும் வசூலில் பெரிதாக இல்லை என்றே கூறுகிறார்கள்.

Double Occupancy

இந்த நிலையில் டபுள் ஆக்குபன்ஸி இதுவரை ஆன வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய அளவில் தமிழ் வெர்சன் ரூ 70 லட்சம் மட்டுமே வசூல் ஆகியுள்ளதாக கூறுகிறது. இதனால் இப்படம் வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு பெரிய  நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web