×

ஹாருக்கானுக்கு இரட்டை வேடம்.... அட்லி புதிய படத்தின் அசத்தல் அப்டேட்....

 

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. பிகில் திரைப்படத்திற்கு பின் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கனை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

மேலும், இப்படத்தை ஷாருக்கான் தனது ரெட் சில்லி நிறுவனம் மூலம் அவரே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. போலீஸ் அதிகாரியாகவும், குற்றவாளியாகவும் ஷாருக்கான் நடிக்கவுள்ளாராம். மேலும், இப்படத்தில் தீபிகா படுகோனே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News