ஆளவிடுங்கடா சாமி!.. அந்த பக்கமே போகமாட்டேன்!.. டிராகன் நடிகையின் திடீர் முடிவு ஏன்?..
தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கயாடு லோஹர், சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கயாடு லோஹர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்த டிராகன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கயாடு லோஹரின் திரைப்பயணம் வேகமெடுத்துள்ளது. தற்போது அவர் நடித்துள்ள இதயம் மற்றும் இம்மார்ட்டல் திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் ஐ அம் கேம், நானி நடித்துவரும் பெரடைஸ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் மஞ்சணத்தி உள்ளிட்ட பல முக்கிய படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில், மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் நடித்த பள்ளிச்சட்டம்பி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் தொடர்ந்து பல மொழிகளில் வாய்ப்புகளை குவித்து வரும் கயாடு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த பதிவில், "உடலுக்கு ஓய்வு தேவைப்படுவது போல மனதுக்கும் ஓய்வு அவசியம். சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், தற்போது சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
கயாடு லோஹருக்கு இன்ஸ்டாகிராமில் 3.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் திடீரென எடுத்துள்ள இந்த முடிவு ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
காரணம் எதுவாக இருந்தாலும், சில காலத்திற்கு கயாடு லோஹரின் புதிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சமூக வலைதள அப்டேட்களை ரசிகர்கள் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரது திரைபயணம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருவதால், விரைவில் புதிய படங்களின் மூலம் ரசிகர்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
