×

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத 'திரௌபதி' படம் எப்படி? - விமர்சனம்

வண்ணாரப் பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கியிருக்கும் திரௌபதி திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இன்று  வெளியாக கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. 
 

கதை பற்றிய அலசல்

ரிஷி ரிச்சர்டு, ஷீலா, கருணாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'திரௌபதி'. கொலை வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வரும் ரிஷி அதன் பிறகு தனது மனைவியான திரௌபதியின் லட்சியத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். எதற்காக ரிஷி சிறை சென்றார், அவரது மனைவியின் லட்சியம் நிறைவேறியதா என்று சொல்லும் படமே திரௌபதி படத்தின் கதை.

படத்தின் சிறப்பு

ரிஷி ரிச்சர்டு ஏற்கனவே மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இப்படத்தின் மூலம் அவர் மீதான எதிர்பார்ப்புகள் கூடியது. ஒரு கலைஞராகவும், மனைவியின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். திறமையை வெளிப்படுத்த அவருக்கு இப்படம் ஒரு சரியான வாய்ப்பு. ஆனால் என்னவோ கடைசியில் வரும் வெளிநாட்டு மாப்பிள்ளை போன்று இவர் முகம் இருப்பதால் தமிழ் ரசிகர்களின் மனதில் இவரது முகம் பதிய மறுக்கிறது.

வக்கீலாக கருணாஸ் சிறிய வேடம் என்றாலும் தனது முதிர்ச்சியான நடிப்பால் படத்தின் முக்கிய திருப்பத்திற்கு உதவியிருக்கிறார்.  ரிஷியின் நண்பராக ஆறு பாலா, சப் ரிஜிஸ்டராக சேசு, ஜீவா ரவி, லேனா உள்ளிட்டோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து செய்துள்ளனர். இருப்பினும் முக்கிய காட்சிகளில் நடிகர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாம். 

ஷீலா ராஜ்குமார் திரௌபதியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். அலர் பேச்சு, செய்கை டயாலாக் டெலிவரி மூலம் சமூக விரோதிகளை விளாசி எடுத்து கேரக்டருக்கேற்ப நடிந்திருக்கிறார்.

பொதுவாக சமூகத்தில் சொல்லப்படும் சாதிய ரீதியான பிரச்சணைகளை வசனங்கள் மூலமாக வெளியிட்டிருக்கிறார் இயக்குநர். அதற்காக ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்  படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறார். 

சொதப்பல்கள்

  • கலப்பு திருமணங்கள் அதன் பின்னணி ஆகியவற்றை படத்தின் களமாக கையாண்ட இயக்குநர் ரிஷி பழிவாங்க எடுக்கும் முயற்சிகளில் இருக்கும் சுவாரசிய குறைவும் மற்றும் லாஜிக் மீறல்கள் படத்தை சற்று வலு இழக்க செய்கிறது.
  • ரிஷியின் பின்னணி கதையை கேட்டு போலீஸ் உதவுவது அப்பட்டமான போலிதனத்தை காட்டுகின்றது.
  • காட்சியின் வடிவமைப்பில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுவதால் படத்தின் சுவாரசியம் குறைந்து காணப்படுகின்றது. நல்ல கதை கொண்ட படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயண் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
  • முக்கியமாக கொலைகளை படத்தில் மையப்படுத்தி அதற்கு ஆதரவாக பேசுவது நல்ல முன்னுதாரணமாக இருக்க வாய்ப்பில்லை.
  • படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை

பாராட்ட வேண்டியவைகள்

  • காதல் வலை விரித்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் நபர்களுக்கு இது ஒரு நல்ல சாட்டையடி.
  • போலி பதிவு திருமணம் செய்து வைப்பவர்கள் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை எச்சரிக்கின்றது.

சாதிகொலை மற்றும் சமூக சீர்கேடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்.

From around the web

Trending Videos

Tamilnadu News