பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்விய திரௌபதி 2!… இவ்ளோதான் வசூலா?!…
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் மோகன்.ஜி. ஒரு குறிப்பிட்ட சாதியை உயர்த்தியும், ஒரு குறிப்பிட்ட சாதியை தாழ்த்தியும் தனது திரைப்படங்களில் காட்சிகளை வைக்கிறார் என்கிற விமர்சனம் இவர் மீது உண்டு. ஆனால் நான் அப்படிப்பட்டவன் இல்லை என மோகன்.ஜி தொடர்ந்து சொல்லி வருகிறார். இந்நிலையில்தான் அவரின்இயக்கத்தில் உருவான திரௌபதி 2 திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இந்த படம் மிகவும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் இந்தியாவுக்கு வரும் சுல்தான் மன்னன் இங்குள்ள இந்துக்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்வது போலவும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது போலவும் காட்சிகளை வைத்திருக்கிறார் மோகன்.ஜி. இதற்கு சில முஸ்லிம் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மோகன்.ஜி ஒரு தவறான வரலாற்றை காட்டியிருக்கிறார்.. சுல்தான் மன்னன் இந்தியாவில் இப்படி நடந்து கொள்ளவில்லை என்று சொன்னார்கள்.
இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டனர்.. ஆனால் ஜனநாயன், பராசக்தி, வா வாத்தியார் போன்ற படங்கள் ரிலீஸ் என செல்லப்பட்டதால் வெளியாகவில்லை.. ஒருவழியாக கடந்த 23ம் தேதி இந்த படம் வெளியானது. ஆனால் அன்றுதான் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆனது. எனவே திரௌபதி 2 படத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை.
எனவே தயவு செய்து தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள்.. பார்த்தவர்கள் மற்றவரிடம் சொல்லுங்கள்.. சமூக வலதங்களில் இது பற்றி வீடியோக்களை பதிவிடுங்கள் என கோரிக்கை வைத்து மோகன்.ஜி நேற்று ஒரு வீடியோ கூட வெளியிட்டார். இந்நிலையில் திரௌபதி 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் 20 லட்சத்திற்கும் குறைவான வசூலை மட்டுமே பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இரண்டாம் நாளான நேற்று மேலும் சில லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்திருக்கலாம் என சொல்கிறார்கள்.
