Karuppu: கருப்பு படத்தை காலி செய்த திரிஷ்யம் 3!.. மொத்த வசூலும் போச்சே!..

 
karuppu

சூர்யாவின் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில்தான், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பண்ணசாமியாக சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கருப்பு திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

படம் வெளியான நான்கு நாட்களில் இந்த படம் 147 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதெநேரம், 18ம் தேதிக்கு பின் வசூல் பற்றிய அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் கொடுக்கவில்லை. கடந்த 2 நாட்களில் வசூல் குறைந்ததே அதற்கு காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில்தான், கருப்பு படத்திற்கு எமனாக மோகன்லாலின் திரிஷ்யம் 3 படம் இன்று வெளியாகியிருக்கிறது. கேரளாவில் கருப்பு படம் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருந்த தியேட்டர்களில் அப்படத்தை தூக்கிவிட்டு இன்று  திரிஷ்யம் 3 திரைப்படத்தை திரையிட்டுவிட்டனர்.  கேரளாவில் மட்டுமல்ல.. பல வளைகுடா வெளிநாடுகளிலும் இதே நிலைதான்.

ஏனெனில், வளைகுடா நாடுகளில் மலையாளிகள் அதிகம் வசிப்பதால் மலையாள படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  இதனால் கேரளா மற்றும் வெளிநாடுகளில் கருப்பு படத்தின் வசூல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கருப்பு படத்தின் வசூல் எந்தவகையிலும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web