drishyam 3 OTT release date: திரிஷ்யம் 3 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
மோகன்லால், மீனா மற்றும் சித்திக் நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை பெற்ற படம் திரிஷ்யம் 3. முன்னதாக வந்த இப்படத்தின்
Jun 13, 2026, 12:59 IST
மோகன்லால், மீனா மற்றும் சித்திக் நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை பெற்ற படம் திரிஷ்யம் 3. முன்னதாக வந்த இப்படத்தின் முதல் மற்றும் 2ம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் 2 பாகங்களை ஒப்பிடுகையில் 3ம் பாகம் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை என்று விமர்சனங்கள் வந்தபோதிலும் வசூலில் எந்த விதத்திலும் அது பாதிக்கவில்லை. இதுவரை கிட்டத்தட்ட ரூ. 235 கோடியை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் திரிஷ்யம் 3 படத்தின் ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைமில் வருகிற 18ம் தேதி முதல் ஸ்டீமிங் ஆகிறது.
