Drishyam3: ரொம்ப எதிர்பார்த்து போகாதீங்க!.. திரிஷ்யம் 3 டிவிட்டர் விமர்சனம் இதோ!...

மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் 3 படத்தின் விமர்சனம் பற்றி பார்ப்போம்..
 
drishyam3

மலையாளத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த திரைப்படம் திரிஷ்யம். ஏற்கனவே 2 பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாகம் இன்று காலை உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

இரண்டு பாகங்களையும் இயக்கிய ஜீத்து ஜோசப் மூன்றாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார். முதல் இரண்டு பாகங்களில் போலீஸ் விசாரணை செய்வதுபோல காட்டப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் பாகத்தில் தனியார் பத்திரிக்கையாளர் குழு தங்களின் டி.ஆர்.பிக்காக ஜார்ஜ் குட்டி தொடர்பான வழக்கை விசாரிக்கிறார்கள்.. அவர்கள் ஜார்ஜ் குட்டிக்கு எதிராக ஆதாரங்களை கண்டுபிடித்தார்கள் இல்லையா என்பதுதான் கதைக்களம்.

twitt

இந்நிலையில் இன்று காலை முதல் காட்சிப் பார்க்க பல ரசிகர்களும் ட்விட்டரில் படம் எப்படியிருக்கிறது என பதிவிட்டு வருகிறார்கள்.. முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது.. அதேநேரம், மிகவும் எதிர்பார்ப்புடன் செல்ல வேண்டாம்.. முதல் இரண்டு பாகங்களை ஒப்பிடும்போது இந்த பாகம் அதைவிட குறைவுதான் என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்..

twitt

முதல் இரண்டு பாகம் போலவே அதே பார்முலாவில் படத்தை இயக்கியிருக்கிறார்கள்.. கொஞ்சம் சலிப்பை தட்டுகிறது.. ஒரு முறை பார்க்கலாம் என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.. சிலர் ‘படம் ஏமாற்றி விட்டது.. ஒரே மாதிரி கதையை எத்தனை முறைதான் பார்க்க முடியும்?’ எனவும் பதிவிட்டு வருகிறார்கள்..

Tags

From Around the web