×

பாத்ரூமில் ஓட்டை.. குளிக்கும் பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர்.. சிக்கிய வீடியோக்கள்!

பாத்ரூம் ஓட்டை வழியாக செல்போனை வைத்து வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவரை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பாத்ரூமில் குழித்துக்கொண்டிருந்த பெண்ணை மொபைல் போன் மூலம் படம் எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. யாரோ பார்ப்பது போன்று உணர்ந்த அந்த பெண் கூச்சலிட அவரது தாய் ஓடி வந்து படம் எடுத்த நபரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்துள்ளார்.

கணவர் வந்ததும் நடந்ததைக் கூறியுள்ளார். ஆட்டோ டிரைவர் வினோத்திடம் இதுகுறித்துக் கணவர் கேட்டபோது  கொன்று விடுவேன் என்று மிரட்டலாக பேசியுள்ளதை தொடர்ந்து போலிசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போனை வாங்கிப் பார்த்த போலீஸார் அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக குளியல் அறையில் குளிக்கும் காட்சிகளும் இருந்தன. இதையடுத்து வினோத்தை கைது செய்த போலீஸார் அவர் மீது வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News