விஜய்யின் 'ஜன நாயகன்'-க்கு ட்ரோன் மூலம் புரொமோஷன் செய்த KVN!

 
Jana Nayagan drone promotion

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'பகவந்த் கேசரி'. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் 'ஜன நாயகன்'.

இதில் ஹீரோவாக தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் நடித்துள்ளார். இவருக்கு தகுந்தாற்போல் ஒரிஜினல் கதையில் சில மாற்றங்களை செய்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஹெச்.வினோத்.

என்னதான் ஒரு பெரிய படமாகவே இருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு புதுவிதமாக புரொமோஷன் செய்ய வேண்டும். அது தான் ரசிகர்களை ஈர்த்து தியேட்டருக்குள் வரவழைக்கும்.

அப்படி நாளை (ஜூலை 23-ஆம் தேதி) ரிலீஸ் ஆகும் 'ஜன நாயகன்' படத்திற்காக இதன் தயாரிப்பு நிறுவனமான 'KVN புரொடக்ஷன்ஸ்' புது விதமான புரொமோஷனை செய்திருக்கிறது. பறக்கும் ட்ரோனில் LED ஸ்க்ரீன் மூலம் படத்தின் வெவ்வேறு போஸ்டர்களை திரையிட்டு அசத்தியிருக்கிறார்கள்.

From Around the web