×

போதைமருந்து விவகாரம் ; நடிகைகளுக்குள் மோதல் : சிறையில் பரபரப்பு
 

 

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பின் திரைப்பட உலகில் போதை மருந்து புலங்குவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது. பாலிவுட்டில் போதை மருந்து பயன்படுத்தாத நடிகர்களே இல்லை என நடிகை கங்கனா ரனாவத் கூறி இந்த புகாரை துவங்கி வைத்தார்.

அதன்பின், இந்த விவகாரம் சூடு பிடிக்க கன்னட நடிகைகள் ராகினி திரிவேதி, நிக்கி கல்ராணி தங்கை சஞ்சனா கல்ராணி என பலரும் சிக்கினர். இவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், பல நடிகர், நடிகைகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிறையில் ராகினி திரிவேதிக்கும், சஞனா கல்ராணிக்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாம். முதலில் ராகினிதான் கைதானார். எனவே, உன்னால்தான் நான் சிறையில் அடைக்கப்பட்டேன் என சஞ்சனா கல்ராணி அவரிடம் சண்டை போட்டு வருகிறாராம். அதோடு, இரவில் விளைக்கை அணைக்காமல் ராகினி புத்தகம் படித்து தூக்கத்தை கெடுப்பதாகவும், அதிகாலையில், விளைக்கை போட்டு உடற்பயிற்சி செய்து சஞ்சனா தனது தூக்கத்தை கெடுப்பதாகவும் இருவரும் மாறி மாறி சிறை அதிகாரிகளிடம் புகார் கூறி வருகின்றனராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News