×

எங்களயா அசிங்கப்படுத்துற… பிரபல யுடியூபரை வச்சி செய்த டப்பிங் கலைஞர்கள்!

கேரளாவில் யுடியூப் சேனலில் தொடர்ந்து பெண்களை பற்றி மோசமாக சித்தரித்து வீடியோ போட்ட  நபருக்கு சினிமா டப்பிங் கலைஞர்கள் பாடம் புகட்டியுள்ளனர்.

 

கேரளாவில் யுடியூப் சேனலில் தொடர்ந்து பெண்களை பற்றி மோசமாக சித்தரித்து வீடியோ போட்ட  நபருக்கு சினிமா டப்பிங் கலைஞர்கள் பாடம் புகட்டியுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் விஜய் பி நாயர். இவர் ஒரு யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் அவர் வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் பெண்களை ஆபாசமாகச் சித்தரித்தும், கொச்சைப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில அவர் சினிமாவில் டப்பிங் பேசும் பெண்களைப் பற்றி மோசமாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் டப்பிங் கலைஞர்கள், நேராக, அவரிடத்துக்கு சென்று அவரை அடித்து, முகத்தில் கருப்பு மையை ஊற்றி மன்னிப்பு  கேட்க வைத்து அதையே ஒரு வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News