காதலருடன் நிச்சயதார்த்தம் செய்த டியூட் நடிகை அர்ச்சனா குமார்... குவியும் வாழ்த்துகள்!
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா குமார் . தனது நடனத் திறமையால் கவனம் பெற்ற இவர், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன் மகள் வந்தாள் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.
சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் நடிக்கத் தொடங்கிய அர்ச்சனா குமார், மார்கன் , டியூட் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து ரீல்ஸ், போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள மகிழ்ச்சியான செய்தியை அர்ச்சனா குமார் இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். தனது காதலர் அருண்குமாருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களையும் அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிகிறது.

அர்ச்சனா குமார் பகிர்ந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன. அவற்றைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் அவரைப் பின்தொடர்பவர்கள் அர்ச்சனா குமார் - அருண்குமார் ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
