காந்தா கந்தலானது போதாது!.. உஷாரான துல்கர் சல்மான்!.. ஐ ஆம் கேம் புதிய ரிலீஸ் எப்போ தெரியுமா?

 
img

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ ஆம் கேம்’  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படம் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

படத்தை துல்கர் சல்மான் தனது Wayfarer Films நிறுவனத்தின் மூலம் தயாரித்து நடித்துள்ளார். நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படம், துல்கர் சல்மானின் 40-வது திரைப்படமாகும். ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். மேலும், துல்கர் சல்மானுடன் கயாடு லோஹர், ஆண்டனி வர்கீஸ், கதிர், மிஷ்கின், வினய் ஃபோர்ட், பார்த்த் திவாரி உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

img

இது குறித்து துல்கர் சல்மான் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'Imgame' படத்தின் வெளியீடு இப்போது இன்னும் பிரம்மாண்டமான அளவில் அமையவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு இருப்பதை நாங்கள் அறிவோம்; தாமதத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவிருந்த 'Imgame', இப்போது செப்டம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.
 
பல்வேறு மார்கேட்டுகளில் இப்படத்தை வெளியிடுவதற்கான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த புதிய வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது; இதன் மூலம் நாடு முழுவதும் மற்றும் அதற்கு மேலும் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவம் கிடைக்கவுள்ளது.

 'Imgame' படத்திற்குத் தகுதியான பிரம்மாண்டமான வெளியீட்டையும், பரந்த பார்வையாளர் சென்றடைதலையும், சிறந்த திரையரங்க வெளியீட்டு வாய்ப்பையும் உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தாலும், 'Imgame' படம் இன்னும் பிரம்மாண்டமானதாக அமையவுள்ளது.

ஓணம் ரேஸிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், தற்போது செப்டம்பர் 3-ம் தேதி  ‘ஐ ஆம் கேம்’ ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இந்த படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். கிரிக்கெட் பெட்டிங், காசினோ சூதாட்டம் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

Tags

From Around the web