காந்தா கருகிப்போச்சு!.. ஐ ஆம் கேம் காப்பாத்தணும் ஆண்டவா!.. துல்கர் சல்மான் ஜோடி கயாடு லோஹர் வேற!

 
dulquer

மலையாள சினிமாவின் பிரம்மாண்டமான பான்-இந்தியா படைப்புகளில் ஒன்றாக உருவாகியுள்ள 'ஐ ஆம் கேம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 20, 2026 அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், அவரது திரையுலக வாழ்க்கையில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படைப்பாகக் கருதப்படுகிறது. 'RDX' வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

வெளியாகியுள்ள டிரெய்லர் முழுவதும் வேகமான திரைக்கதை, விறுவிறுப்பான ஆக்‌ஷன்,  மற்றும் அதிரடி காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும்,  இதுவரை இல்லாத மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்திருப்பதும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.


தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. தற்போது டிரெய்லர் வெளியீடும் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் அமைத்துள்ள பின்னணி இசை டிரெய்லருக்கு வலு சேர்த்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'லோகா' திரைப்படத்திற்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள 'ஐ ஆம் கேம்', துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம், ஓணம் வெளியீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் என திரையுலகில் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web