கோட் பட வசூலுக்கு வேட்டு வைக்க முடிவு பண்ண மம்மூட்டி மகன்!.. யாருக்கு ரிஸ்க்கா முடியப் போகுதோ?..

நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக போவதாக பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்துவிட்டனர். அந்த படத்தின் சிஜி காட்சிகளுக்காக வெளிநாட்டு நிறுவனத்துடன் அடிக்கடி பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் வெங்கட் பிரபு விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறைவு செய்ய உள்ளார்.

விஜய்யுடன் முதன் முதலாக பிரசாந்த் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார். மேலும், மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, பிரேம்ஜி, வைபவ் என பெரிய நட்சத்திர பட்டாளம் கோட் படத்தில் நடித்துள்ளது.நடிகர் விஜய் இந்த படத்தில் மூன்று விதமான லுக்கில் நடித்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்துக்காக கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் அங்கே ரசிகர்களை சந்தித்து பேசிய காட்சிகள் மற்றும் விஜய்யை சந்திக்க கேரளா ரசிகர்கள் பெரும் கூட்டமாக திரண்டது என மிகப்பெரிய ரசிகர்கள் மாநாட்டையே விஜய் நடத்தி இருந்தார்.

இந்நிலையில், துல்கர் சல்மான் தில்லாக விஜயுடன் நேருக்கு நேர் மோதத் தயாராகிவிட்டார். துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான கிங் ஆஃப் கொத்தா படம் பிளாப் ஆன நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்.

லக்கி பாஸ்கர் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகப் போவதாக துல்கர் சல்மான் தற்போது ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். கேரளாவில், மம்மூட்டிக்கும் மம்மூட்டி மகனுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், கோட் படத்தின் வசூல் பாதிக்குமா? அல்லது மீண்டும் துல்கர் சல்மான் பல்பு வாங்குவாரா? என கேரளா ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

கோட் படம் செப்டம்பர் 5ம் தேதியும், லக்கி பாஸ்கர் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதியும் வெளியாகின்றன. மேலும், இந்த இரண்டு படங்களிலும் மீனாட்சி செளத்ரி தான் ஹீரோயின் என்பது மேலும், ஒரு சூப்பரான ட்விஸ்ட்.

Related Articles

Next Story