×

சிம்புவிற்கு டும் டும் டும்...  விடிவி கணேஷ் சொன்ன மகிழ்ச்சியான சேதி!

பிரபல நடிகரும் சிம்புவின் நெருங்கிய நண்பருமான விடிவி கணேஷ் சிம்புவின் திருமணத்தை குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.  அதாவது, " சிம்புவிற்கு விரையில் திருமணம் நடைபெறும். சீக்கிரம் இந்த மகிழ்ச்சியான செய்தியை எதிர்பாருங்கள் " என கூறி STR ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திவிட்டார்.

 

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிம்பு சமையல் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பல பெண்களின் மனங்களை வெகுவாக கவர்ந்தார். இதையடுத்து ரசிகர்கள் மட்டுமல்லாது திரைபிரபலங்கள் பலரும் உங்கள் மனைவியை காண காத்திருக்கிறோம் என கூறினர்.

பன்முகத்தின் கொண்ட நடிகர் சிம்பு பல சர்ச்சைகளில் சிக்கினாலும் அவரது ரசிகர்கள் எப்போதும் சிம்புவை விட்டுக்கொடுத்ததேயில்லை. அவர் நிறைய படங்கள் நடிக வேண்டும், மீண்டும் பழைய மன்மதனாக பார்க்கவேண்டும். சிம்புவிற்கு சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும் என சொந்த அண்ணன் போன்று அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ரசிகர்கள் அக்கறையுடன் இருப்பார்கள். அப்படித்தான் இந்த திருமண செய்தியும் அவர்களை பேரின்பப்படுத்தியிருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News