">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வாட்டர் பர்த் முறையில் குழந்தை பெற்ற நகுல் மனைவி – எமோஷனல் பதிவு!
நகுல் மனைவி பதிவிட்ட எமோஷனல் பதிவு
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் தனது குண்டு உடலை குறைத்து ஸ்லிம் ஆகி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பு மட்டுமன்றி பாடுவதிலும் திறமைமிக்கவராக இருந்து வரும் நகுல் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராக இருந்துள்ளார். தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இவர் தனது நெருங்கிய தோழி ஸ்ருதி என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கடந்த வாரம் தான் இவர்களுக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்ப்போது மகளுக்கு ஒரு மாத வயது ஆவதை தெரிவித்து குழந்தை பெற்றெடுத்த அனுபவத்தை குறித்து எமோஷ்னலாக பதிவிட்டுள்ளார். ஸ்ருதி, குழந்தை பிறப்பின் இயற்கை முறையான “வாட்டர் பர்த்” முறையில் குழந்தை பெற்றெடுத்தது இந்த பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.