×

திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்? - விரைவில் அறிவிப்பு

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 

திமுக பொதுச்செயலாளராக இருந்து வந்த பேராசிரியர் அன்பழகன் சமீபத்தில் காலமானார். எனவே, அவரது பதவியில் யார் அமர்த்தப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வருகிற 29ம் தேதி திமுக பொதுக்குழு கூடவுள்ளது. 

இந்நிலையில், பொருளாளர் பதவியிலிருந்து விலகி பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விரும்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, ஏ.வ.வேலு மற்றும் க.பொன்முடி ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 29ம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவில் பொதுச்செயலாளரோடு சேர்த்து பொருளாளரும் தேர்வு செய்யப்படவுள்ளதால் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கவேண்டும் என ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News