×

தர்பார் நஷ்டம்...கை விரித்த ரஜினி...எஸ்கேப் ஆன முருகதாஸ்... 

தர்பார் படத்தை வெளியிட்டதில் வினியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஏற்க ரஜினி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 

லைக்கா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் தர்பார். இப்படத்தின் வசூல் அத்தனை கோடி, இத்தனை கோடி என ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.

ஆனால், இப்படத்தை அதிக விலைக்கு வாங்கி வெளியிட்டதில் ரூ.65 கோடி நஷ்டம் அடைந்திருப்பதாக கூறி வினியோகஸ்தர்கள் சிலர் ரஜினியை சந்திக்க முயன்றனர். ஆனால், ரஜினி அவர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டார். அதேபோல், லைக்கா நிறுவனமும் தங்களுக்கு ரூ.20 கோடிக்கு மேல் நஷ்டம் எனக்கூறி பின் வாங்கி விட்டது. முருகதாஸை சந்திக்க முயன்ற போது அவர் அடுத்த படம் தொடர்பாக ஹைதராபாத்துக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.

எனவே, அடுத்த என்ன செய்வது என வினியோகஸ்தர்கள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News