ajith
Vidamuyarchi: நடிகர் அஜித்தின் நடிப்பில் தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஒரு நீண்ட இழுபறிக்குப் பிறகு இப்போதுதான் விடாமுயற்சியின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்கையில் யார் கண்பட்டதோ திடீரென அந்தப் படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்த மிலன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: விடாப்பிடியா நிற்கும் லியோ படக்குழு… நீங்க தரலனா என்ன? கோர்ட் படியேறியே லலித்..
இந்த செய்தி விடாமுயற்சி படக்குழுவுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரையுலகத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கலை இயக்குனர் மிலன் அஜித்துக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். அஜித் வீட்டு இண்டீரியர் வேலைகள் எல்லாமே மிலன்தான் கவனித்து வருவாராம்.
சினிமாவையும் தாண்டி அஜித்துக்கும் மிலனுக்கும் இடையே அப்படி ஒரு நட்பு இருந்து வந்ததாம். இந்த நிலையில் விடாமுயற்சி படக்குழு மிலனில் மறைவால் தவித்துக் கொண்டிருக்க சூர்யாவின் கங்குவா திரைப்படக்குழுவும் நயனின் மண்ணாங்கட்டி திரைப்படக்குழுவும் பரிதவித்துக் கொண்டு வருகிறார்களாம்.
இதையும் படிங்க: இனிமே நீங்க வந்தா என்ன?.. வரலனா என்ன?..ஃபீலிங்கான விஷால்..!
ஏனெனில் கங்குவா மற்றும் மண்ணாங்கட்டி திரைப்படத்திற்கும் கலை இயக்குனராக மிலன் தான் இருக்கிறாராம். கங்குவா திரைப்படத்திற்காக ஈவிபியில் ஒரு பிரம்மாண்ட செட்டை போடச் சொல்லியிருக்கிறாராம் மிலன்.
அஜர்பைஜானில் முதல் செட்யூல் முடிந்து கங்குவா திரைப்படத்தின் செட் பணிகளை பார்ப்பதற்காக சென்னை வருவதாக இருந்தாராம் மிலன். ஆனால் அதற்குள் அவரின் மரணம் அவரை அழைத்துக் கொண்டது.
இதையும் படிங்க: லியோ ஷூட்டிங்கில் விஜயுடன் யுடியூபர் இர்பான்!.. கொல மாஸ் ஃபீலிங்!.. நடந்தது இதுதான்!..
அதே போல் நயன் நடிக்கும் மண்ணாங்கட்டி திரைப்படத்திற்காகவும் கொடைக்கானலில் செட் அமைக்கும் பணிகளை தன் உதவியாளர்களை வைத்து பார்த்துக் கொண்டாராம். அதனால் இந்த படங்கள் மிலனின் மறைவால் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ஆதிக் ரவிச்சந்திரன்…
Goundamani: கோவையை…
TVK Vijay:…
AK64: ஆதிக்…
Karuppu Movie:…