அசிங்கப்படுத்திய இயக்குனர் - அதே இடத்தில் வச்சி ஆஃப் பண்ண துஷாரா!
நடிகை துஷாரா விஜயன்:
மிகச் சிறந்த கதைகளை தேர்வு செய்து தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வெகு சீக்கிரத்திலேயே பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகை துஷாரா விஜயன்.
போதை ஏறி புத்தி மாறி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தவர் தொடர்ந்து சார்பட்டா பரம்பரை, அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, ராயன், வேட்டையன், வீரதீரசூரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ்நாட்டுப் பெண்ணான இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மிகச்சிறந்த நடிகையாக தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை கட்சிதமாக நடித்து கொடுக்கும் திறமையான நடிகை.
அவமானங்கள்:
குறிப்பாக சார்பட்டா படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு மனைவியாக மாரியம்மா என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் சமீபத்திய விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை துஷாரா விஜயன், தான் முதன்முதலில் நடிகையாக அறிமுகமான போது பட்ட அவமானங்கள் குறித்தும் பேசி இருக்கிறார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது நான் முதன்முதலில் திரைப்பட வாய்ப்புகளை கேட்டு சென்றபோதெல்லாம் நீ எதுக்குமா இங்க வந்த? உனக்கு எல்லாம் இந்த வாய்ப்பு கிடைக்காது… சான்சே இல்லை என்று என்னை நிராகரித்தார்கள்.
இயக்குனர் ஷாக் :
நீ எதுக்கு மா இங்க வந்த? உனக்கெல்லாம் வாய்ப்பே கிடைக்காது என்று அசிங்கப்படுத்தினார் ஒரு இயக்குனர். ஆனால், அதே இயக்குனர் முன்பு நான் ஒரு நாள் தலை நிமிர்ந்து நின்றேன். ஆம் சார்பட்டா திரைப்படத்திற்காக நான் ஸ்டூடியோவில் டப்பிங் செய்து கொண்டிருந்தபோது அங்கு அதே இயக்குனரை சந்தித்தேன்.
அப்போது நீ என்னமா இங்க பண்ற? என்று அதே கேள்வியை மறுபடியும் என்னிடம் கேட்டார். அதுமட்டுமில்லாமல் நீ இங்க யாருக்காவது வாய்ஸ் கொடுக்க வந்திருந்தியா? என்ன கேட்டார்.
இல்ல சார் இது என்னோட படம் தான் என்னோட படத்துக்கு தான் நான் வாய்ஸ் கொடுக்கிறேன். சார்பட்டா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன் என கெத்தாக கூறினேன் என்றார் துஷாரா.
