குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை.. துஷாரா விஜயன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் கவனம் பெற்றுவருபவர் துஷாரா விஜயன்.போதை ஏறி புத்தி மாறி படத்தின்
 
dushara vijayan

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் கவனம் பெற்று வருபவர் துஷாரா விஜயன்.போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் அறிமுகமான இவர், பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன்,  ராயன், வேட்டையன், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது துஷாரா விஜயன் நடித்துள்ள ஜி.டி.என் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதையடுத்து விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மகுடம் படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய  துஷாரா விஜயன், 

நம்மை நாமே பார்த்துக் கொள்ள முடியவில்லை. இதில் நான் ஒரு குட்டி பாப்பாவை பெற்று அவர்களுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், என் அக்கா பசங்களுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கிக் கொடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நான் யாரை டேட் செய்தாலும், குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிடுவேன் என்றும் துஷாரா விஜயன் கூறியுள்ளார்.

Tags

From Around the web