×

கட்டிக்க போறவருடன் காஜல் அகர்வால் வெளியிட்ட ரொமான்டிக் போட்டோஸ்!

வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்

 
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த கௌதம் என்ற இன்டீரியர் டிசைனர் ஒருவரை திருணம் செய்துகொள்ள போகிறார். நெருங்கிய குடும்ப நண்பரான அவருக்கும் காஜல் அகர்வாலுக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றது. வருகிற அக்டோபர் 30-ம் தேதி நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தற்ப்போது காஜல் தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த ரொமான்டிக் போட்டோ இணையத்தில் தீயாக பரவி வைரலாகியுள்ளது.

View this post on Instagram

Happy Dussehra from us to you ! @kitchlug #kajgautkitched

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

From around the web

Trending Videos

Tamilnadu News