×

ஆனாலும் சிம்புவுக்கு தில்லு அதிகம்தான்? - ஈஸ்வரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்திற்காக ஒரு மாதம் தொடர்ச்சியாக நடித்து கொடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சிம்பு. மேலும், தற்போது மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படம் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அடுத்த நாள் ஜனவரி 14ம் தேதி வெளியாகவுள்ளது. மாஸ்டர் திரைப்படம் சுமார் 600 தியேட்டர்களிலும், ஈஸ்வரன் 400 தியேட்டர்களிலும் வெளியாகும் எனத்தெரிகிறது.

எனவுடன் விஜயுடன் மோதுவது என சிம்பு எடுத்த முடிவு திரையுலகினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் கடந்த 9 மாதங்களாக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் செல்லாத நிலையில், இந்த 2 படங்களும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் என நம்பப்படுகிறது.,


 

From around the web

Trending Videos

Tamilnadu News