×

தனுஷுக்கு போட்டியாக சிம்பு.... 100 மில்லியன் வியூஸ் போன ஈஸ்வரன் பட பாடல்... 

 
simbu

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிம்பு-தனுஷ் போட்டி எப்போதும் திரையில் உண்டு. தான் நடிக்கும் திரைப்படங்களிலேயே தனுஷை மறைமுகமாக தாக்கி சிம்பு வசனமெல்லாம் பேசியுள்ளார். 

ஒருபக்கம் யுடியூப்பில் பாடல் ஹிட் அடிப்பதை துவங்கி வைத்தவர் தனுஷ். அவரும், அனிருத்தும் இணைந்து உருவாக்கிய ‘ஒய் திஸ் கொலை வெறி பாடல்’ உலகம் முழுவதும் ரீச் ஆனது. அதன்பின் அவர் நடித்த மாரி 2 திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் 100 கோடி வியூஸ்களை பெற்றது. 

இந்நிலையில், சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் யுடியூப்பில் 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களை பெற்றுள்ளது. சிம்பு நடிக்கும் படத்தின் பாடல் யுடியூப்பில் சாதனை செய்தது இதுவே முதன்முறையாகும். எனவே, இது சிம்புவுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமன் இசையில், யுகபாரதி படல் எழுதி சிம்புவும், ரோஷினியும் இப்பாடலை பாடியிருந்தனர். இந்த பாடல் கடந்த ஜனவரி மாதம்தான் யுடியூப்பில் வெளியானது. அதற்குள் 100 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து டிவிட்டரில் சிம்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News