×

சிம்புக்கு ஆப்பு வைத்த பாம்பு... அதிரடியாக நீக்க உத்தரவு! கடைசியில வட போச்சே!

தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடப்பட்ட டீஸரை நீக்க உத்தரவிட்டிருப்பது சிம்பு ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.
 

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் தன் தோளில் பாம்பை வைத்தபடி போஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடிக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவை பார்த்த சென்னையை சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் புகார் அளித்தார்.

படத்தில் நிஜ பாம்பை பயன்படுத்தவில்லை, அது கிராபிக்ஸ் தான் என்று சுசீந்திரன் வனத்துறையிடம் விளக்கம் அளித்தார். ஆனால் படத்தில் பயன்படுத்தப்பட்டது நிஜ பாம்பு இல்லை என்பதற்கான ஆதாரங்களை சமர்பிக்கவில்லை என்று கூறி வனத்துறை அதிகாரிகள் சிம்பு மற்றும் சுசீந்திரனுக்கு இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பினார்கள்.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீஸரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது,

ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீஸரில் கிராஃபிக்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் பாம்பினை, இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் (NOC)பெறாமல் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

இது Performing Animals (Registration) Rules, 2001 என்கிற விதியை மீறிய செயலாகும். எனவே, உடனடியாக இந்த டீஸர் மற்றும் போஸ்டரை நீக்கிவிட்டு, இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற 7 நாட்களுக்குள், ஏன் உரிய அனுமதி பெறவில்லை என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News