×

இந்த ஊத்தாப்பம் சாப்பிடுங்க… கொரோனா அண்டாது – ஹோட்டல்காரரின் அலம்பல் !

உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களை பீதியடைய வைத்திருக்கும் நிலையில் அதை வைத்து தனது ஹோட்டல் பிஸ்னஸூக்கு விளம்பரம் தேடியுள்ளார் ஒரு ஹோட்டல்காரர்.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் அனைவரையும் பீதியடைய வைத்துள்ளது. சீனாவின் அண்டை நாடான இந்தியாவில் கூட அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது, ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறது என வாட்ஸ் ஆப் பார்வேர்டு மெஸேஜ்கள் வெளியாகி வருகின்றன.

அவற்றின் உண்மைத் தன்மையே தெரியாத நிலையில் இன்று ஹோட்டல்காரர் ஒருவர் ‘கொரோனா வைரஸ் வராமல் தடுக்க சின்ன வெங்காய ஊத்தப்பம் சாப்பிடவும்" என்று எழுதி வைத்து விளம்பரம் செய்துள்ளார் காரைக்குடியில் பிரசிடென்ட் என்ற ஹோட்டல் உரிமையாளர். திருவண்ணாமலையைச் சேர்ந்த அந்த ஹோட்டலின் விளம்பரப் பலகை சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

அத்தோடு நில்லாமல் ‘நாங்கள் 65 வருடமா இந்த தொழில் நடத்தி வருகிறோம். சின்ன வெங்காயம் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது’ என ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News