×

எடப்பாடி பழனிச்சாமியே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் - ஓட்டெடுப்பில் தகவல்

 

இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஜெ.வின் மறைவுக்கு பின் சசிகலாவால் முதல்வர் பதவியை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி திறம்பட 4 வருடமாக ஆட்சியை வெற்றிகரமாக நடத்திவிட்டார். ஒருபக்கம் ஓ.பன்னீர் செல்வமும் ஓரங்கட்டப்பட்டார்.

தற்போது தானே அடுத்த முதல்வர் வேட்பாளர் என ஓ.பி.எஸ் கருதுகிறார். ஆனால், அதை விட்டுக்கொடுக்க பழனிச்சாமிக்கி விருப்பமில்லை. மேலும், நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் 90 சதவீதம் பேர் பழனிச்சாமிக்கு ஆதரவாக நின்றுள்ளனர். அதில் சிலர் பன்னீரின் ஆதரவாளராக இருந்தவர்கள். 

ops

மேலும், பிரபல இணையதள பத்திரிக்கை நடத்திய வாக்கெடுப்பிலும் பழனிச்சாமியே அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராக இருக்கக்கூடும் என பலரும் வாக்களித்துள்ளனர். மேலும், பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ஓ.பி.எஸ்-ஸின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு பலரும் ‘கட்சியிலிருந்து விலகுவார்’ என பதிலளித்துள்ளனர்.

இதனால் அடுத்து என்ன செய்வது என்கிற ஆலோசனையில் ஓ.பி.எஸ் ஈடுபட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News