×

எடப்பாடி பழனிச்சாமியே முதல்வர் வேட்பாளர் - அதிமுகவில் முக்கிய முடிவு

 

அதிமுகவில் யார் அடுத்த முதல்வர் என்கிற பேச்சு கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தலைப்பாக இருந்தது. 4 வருடங்களுக்கும் மேல் கட்சியையும், ஆட்சியையும் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிகரமாக வழிநடத்தி விட்டதால் அவருக்கே பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தது.

ஆனால், ஓ.பன்னீர் செல்வம் பல நிபந்தனைகளை வைத்திருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைத்து முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது ஏற்கப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமிமே முதல்வர் வேட்பாளர் என இறுதி செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில், இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு செய்தியாளர்களிடம் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கூட்டாக அறிவிக்கவுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News