வாழை விவசாயிகளின் குறைகளை கேட்ட முதல்வர் பழனிச்சாமி...புதிய திட்டங்களை அறிவித்தார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2வது நாளாக தனது பிரச்சாரத்தை திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் இன்று துவங்கினார். அப்போது, செல்லும் வழியில் பெருங்குடி பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் விவசாயம் செய்து வந்த விவசாயிகளை சந்தித்து பேசினார்.
அப்போது டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தரும் அதே முக்கியத்துவத்தை திருச்சி மேற்கு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும் கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், வாழை மரம் என்பது ஒரு வருட வெள்ளாமை. எனவே, லாலாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு உள்ளது போல சலுகைகளை தங்களுக்கும் அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதாக முதல்வர் வாக்களித்தார்.
மேலும், அடிப்படை கல்வி முதல் மருத்துவ படிப்பிற்கு இட ஒதுக்கீடு வரை அரசு இலவசமாக அரசு வழங்கி வருவதால் விவசாயிகள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், வாழைப்பட்டையில் இருந்து துணி தயாரிக்க முடியும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். எனவே, அவரின் தலைமையில் புதிய தொழிற்சலை கொண்டு வர அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார். மேலும், முசிறி - குளித்தலை இடையே தடுப்பு அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.