செல்லும் இடமெங்கும் கூடும் கூட்டம்...மக்களிடம் வரவேற்பை பெரும் முதல்வரின் பிரச்சாரம்....

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை துவங்கியுள்ளன. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வரும் பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில், பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்து வருகிறார். மேலும், அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை எடுத்துரைத்து அவர் வாக்குகள் சேகரித்து வருகிறார்.
சமீபத்தில் நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துகுடி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு விவசாயிகள், வியாபாரிகள், மீனவர்கள் , நெசவாளர்கள் என பல தரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார். எனவே, செல்லும் இடமெல்லாம் அவரின் பேச்சை கேட்ட மக்கள் ஆர்வமுடன் கூடினர். மக்களோடு மக்களாக தேநீர் கடையில் அவர் தேநீர் அருந்தினார். ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்று காபி குடித்தது அந்த சமுதாய மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது. ஈரோடு மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. எனவே, தனது பிரச்சாரத்தை நிறுத்தி அதற்கு வழிவிடுமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுப்பட்டியில் மழையையும் பொருட்படுத்தாமல் அவரின் பேச்சை பொதுமக்கள் கேட்டு மகிழ்ந்தனர். ராணுவத்தில் உயிரிழந்த கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமியின் இல்லத்திற்கு சென்று அவரின் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை அதுவும் திமுக கட்சி காரர்களை ஒரு இடத்தில் கூட்டி கிராம சபை நடத்தி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சந்தித்து வாக்கு சேகரித்து வருவது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.