×

யார் தவறு செய்தாலும் அதிமுகவில் நடவடிக்கை - ஈரோட்டில் முதலமைச்சர் பேச்சு

 

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக கட்சியினர் ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு பணம் கேட்டால் தகராறு செய்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் மீது ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதிமுகவில் யாரேனும் அந்த தவறை செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், திமுகவில் அவர்களுக்கு பதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதிமுகவை ஸ்டாலின் குறை கூறி வருகிறார்.

கிராமசபை கூட்டங்களை ஸ்டாலின் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலின் போது அவர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் மக்கள் கொடுத்த மனுக்களுக்கு அவர் என்ன நடவடிக்கை எடுத்தார். திமுக ஆட்சியிலேயே இல்லை. எனவே, மனுவை வைத்து அவர் என்ன செய்ய முடியும்?..என முதல்வர் கேள்வி எழுப்பினார்.

மேலும், பொள்ளாச்சி சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி வழக்கில் ஹேரன் பால், பைக் பாபு, அருளானந்தம் என 3 பேரை சிபிஐ போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதில், அருளானந்தம் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளராக இருந்தவர். இதனையடுத்து, அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News