×

வீடியோ கான்பிரன்ஸில் பேசுவது பெரிய விஷயமா? - ஸ்டாலினை விளாசிய முதல்வர்

 

தமிழக முதல்வர்களில் அதிகம் மக்களை சந்தித்த முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மாறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் போது எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கம்ப்யூட்டர் வழியாக நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருந்த போது எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்தித்தார். செல்லும் வழியெங்கும் தனது வண்டியை நிறுத்தி மக்களை மாஸ்க் அணிய சொல்வது, விவசாயிகளிடம் உரையாடுவது, அவர்களின் குறைகளை கேட்டு தெரிந்து கொள்வது என மக்களின் மனதை கவர்ந்து வருகிறார்.

மக்கள் நலப்பணி திட்டங்களை தொடங்கி வைக்க அவர் அடிக்கடி பல மாநிலங்களுக்கும் சென்று வருகிறார். அப்போதெல்லாம் தவறாமல் அப்பகுதி அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், விவசாய தலைவர்கள், மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள், வியாபாரிகள் என அனைவரிடமும் உரையாடி வருகிறார். இதன் மூலம் மக்களின் மன நிலை என்ன, அந்த பகுதியில் உள்ள  விவசாயிகளின் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை என என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதிகாரிகள் மூலம் தீர்வு காண முயல்கிறார். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில்,  சேலம் மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள வாணியம்பாடியில் இன்று அம்மா கிளினிக்கை துவங்கி வைத்த முதல்வர் பழனிச்சாமி ‘மக்களுக்காகவே வாழ்ந்த எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகியோருக்கு குழந்தைகள் கிடையாது. மக்கள்தான் அவர்களுக்கு வாரிசுகள். கொரோனா பேரிடர் காலம் முதல் தற்போதுவரை நான் மாவட்டம் தோறும் நேரில் சென்று நோய் தடுப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் இருந்தபடி வீடியோ காணொளி மூலம் பேசி வருகிறார் என பேசினார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News