×

முதல்வர் திறந்து வைத்த ஜெயலலிதா நினைவிடம் - லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு

 

ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணியை முதல்வர் பழனிச்சாமி கடந்த 2018ம் ஆண்டு மே 8ம் தேதி துவங்கி வைத்தார். கட்டுப்பாணிகள் முடிந்து இன்று காலை அந்த நினைவிடம் திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர் பழனிச்சாமி ஜெ.வின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தினார்.அவரைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். 

memorial

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது, அதிமுக ஒரு எஃகு கோட்டை என்றும் ஜெயலலிதா சட்டசபையில் பேசியதை நினைவு கூர்ந்தார். மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை தொடர செய்வதே நம் லட்சியம் என் சபதம் ஏற்போம் என சூளுரைத்தார். அவரின் இந்த பேச்சுக்கு அதிமுக தொண்டர்கள் கரகோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு இன்று காலை முதலே அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் வர துவங்கினர். லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. இது அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. தங்கள் தலைவிக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் ஒரே இடத்தில் ஒற்றுமை அவர் ஒன்று சேர்ந்தது அவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

jayalalitha

ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள்:

* ஜெயலலிதாவின் நினைவிடம் 9.09 ஏக்கர் மொத்த பரப்பளவில் அமைந்துள்ளது 

*  ஜெ.வின் நினைவிடம் பீனிக்ஸ் பறவையின் சாயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது 

* உப்பு காற்றால் பாதிப்பு ஏற்படாதவாறு கான்கீரிட் மேற்பரப்புகள் அமைக்கப்பட்டுள்ளன

* 8555 சதுர அடியில் சிறந்த கட்டட வடிவமைப்புடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது 

* அருங்காட்சியகத்தில் பல்வேறு மெழுகு சிலைகள் மற்றும் புகைப்பட அமைப்புகள் இடம்பெற்றுள்ளது.

* நினைவிடத்தின் பக்கவாட்டுகளில் உயர்தர பளிங்கு கற்களும் தரைப் பகுதியில் உயர்தர கருங்கற்களும் பதிக்கப்பட்டுள்ளது.

* நினைவிட வளாகத்தில் சுமார் 8500 சதுர அடி பரப்பளவில் அறிவுத்திறன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது

* நினைவிட வளாகத்தில் இரு பக்கவாட்டிலும் 110 அடி நீளத்திற்கு மேற்கூரை கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது 

memorial

* நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஒளி சேமிப்பு தகடுகள் பதிக்கப்பட்டு அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது

* பார்வையாளர்களை கவரும் வண்ணம் நீர் தடாகங்கள் சிறந்த தோட்ட கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது

* நினைவிடத்தை அழகுபடுத்தும் வகையில் சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டுள்ளன 

* தோட்டக்கலை வல்லுநர்களின் ஆலோசனைகளின் படி பல்வகை நாட்டு மரங்களை கொண்டு மியாவாக்கி தோட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது 

* நுழைவாயிலில் மறைந்த முதல்வர் எம்.ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது 

* நினைவிடத்தின் இரு புற நுழைவு பகுதிகளிலும் ஆண் சிங்க வடிவில் கருங்கற்களால் ஆன சிலை அமைக்கப்பட்டுள்ளது

* மின்சார வசதி, அலங்கார வண்ண மின் விளக்குகள் காண்காணிப்பு கேமிரா வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன 

* எம்.ஜி.ஆரின் சமாதியில் வைக்கப்பட்டது போல் ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் அணைய விளக்கு வைக்கப்பட்டுள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News