×

தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல்வர் பழனிச்சாமி...

 
தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல்வர் பழனிச்சாமி...

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொரோனா தொற்று பரவ துவங்கியது. ஒரு வருடம் ஆகியும் கொரோனா வைரஸ் முற்றிலும் குறைந்தபாடில்லை. 

எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் இறங்கியது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது. 3ம் கட்ட பரிசோதனைக்கு பின் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு இந்த ஊசி போட்ப்பட்ட நிலையில், தற்போது 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஊசி போடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர். 

eps

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மேலும், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News