×

அரசியலில் அசரடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி - திணறும் மு.க.ஸ்டாலின்
 

 
அரசியலில் அசரடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி - திணறும் மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா, கருணாநிதி என 2 பெரிய ஆளுமைகள் இல்லாமல் தமிழக அரசியல் செயல்பட்டு வருகிறது. ஆளும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தனது செயல்பாட்டால் மக்களிடன் நன்மதிப்பை பெற்று வருகிறார். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

காரணம், மக்களுக்கு எது நன்மை தரும் என கணக்குப்போட்டு பல திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கில் ரூ 1000,  பொங்கலுக்கு 2 ஆயிரம்,  ஈழத்தமிழருக்கு  இரட்டை குடியுரிமை கோரிக்கை, பொதுத்தேர்வு ரத்து, அனைவரும் ஆல் பாஸ், கல்லூரி தேர்வுகள் ரத்து, காவிரி டெல்டாவை  பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அரசு பள்ளி மாணவர்களுக்கு வீட்டிற்கே சென்று சத்துணவு பொருட்களை கொடுத்தது என மக்களிடம் நல்ல பெயரை எடப்பாடி பழனிச்சாமி பெற்று வருகிறார்.  

ஆனால் ஸ்டாலினுக்கோ ‘நான் கலைஞரின் மகன்’ என்கிற இமேஜை தாண்டி மக்களின் மனதை அவர் ஈர்க்கவில்லை என்பதே நிதர்சனம். 

90களில் சென்னை மேயராக ஸ்டாலின் இருந்த போது அவரின் நடவடிக்கைகளை பலரும் பாராட்டினர். ஸ்டாலின் ஒரு சிறந்த நிர்வாகி என ரஜினியே பேசினார். ஆனால், தற்போது மேடை பேச்சுக்களில் துண்டு சீட்டு இல்லாமல் அவரால் பேச முடியவில்லை. மேலும், தகவல்களை தவறாக உளறுகிறார் என சமூகவலைத்தளங்களிலும் அவர் கிண்டலடிக்கப்பட்டு வருகிறார்.

கலைஞர் கருணாநிதியிடம் இருந்த சாதுர்யம், சாணக்யத்தனம் இரண்டுமே ஸ்டாலினிடம் இல்லை. எந்த சூழ்நிலையில் எப்படி விமர்சனம் செய்ய வேண்டும். தன் மீது விமர்சனம் வரும் போது எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் கோட்டை விடுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்னர்.

அதேபோல், குடும்ப அரசியல் என்பது திமுகவின் மீது பெரும் கரும்புள்ளியாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்தது, கனிமொழியை ஓரம் கட்டியது, திமுகவில் அனுபவம் வாய்ந்தவர்களை அரவணைத்து செல்லாதது என ஸ்டாலின் தவறான அரசியல் நடவடிக்கைகள் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பள்ளி மாணவரக்ளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கிட்டு விஷயத்தில் தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதமானதால், சாதுர்யாமாக அரசாணை பிறப்பித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார் எடப்பாடி பழனிச்சாமி. எனவே, வேறு வழியின்றி ஆளுனரும் ஒப்புதல் தர வேண்டியதாயிற்று. உடனடியாக அவரை நேரில் சந்தித்து நன்றி கூறி, அவரின் கோபத்தையும் தணித்து அரசியலை லாவகமாக கையாள்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த விவாகரத்திற்காக 2 முறை போராட்டம் நடத்தியும் திமுகவிற்கு நல்ல பெயர் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார் பழனிச்சாமி.

அதேபோல், கூட்டணி கட்சியாக இருந்தாலும் பாஜக தரப்பில் நாளை துவங்கவிருந்த வேல் யாத்திரைக்கு அதிரடியாக தடை விதித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இதை வைத்து பார்க்கும் போது அரசியல் களத்தில் எடப்பாடி பழனிச்சாமி கவனமாக கையாண்டு மக்களின் நன் மதிப்பை பெற்று வருகிறார். பல காரணங்களால் மு.க.ஸ்டாலின் கோட்டை விடுகிறார். இப்படியே போனால் அவர் கோட்டையையும் விடுவார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News