×

விரைவில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் - களத்தில் இறங்கும் முதல்வர் பழனிச்சாமி

 

இன்னும் 5 மாதங்களில் தமிழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. எனவே, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. எந்த கட்சிக்கும் இன்னும் கூட்டணிகள் முடிவாகவில்லை. ஆனாலும், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை துவங்கிவிட்டன. இதில், தமிழக முதல்வர் மற்றும் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 19ம் தேதி சேலம் எடப்பாடியில் தனது பிரச்சாரத்தை துவங்கினார். இதை எதிர்பார்க்காத திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக ‘கிராம சபை’ என்கிற பெயரில் பிரச்சாரத்தை துவங்கினார். 

மக்களை ஒரு இடத்தில் கூட்டி அவர்களிடம் பேசுவது கிராம சபை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி மக்களை களத்தில் சென்று சந்திகக்வுள்ளார். கடந்த 10 வருடங்களாக அதிமுக அரசு என்னென்ன மக்கள் நல திட்டங்களை செய்தது, தமிழக அரசு சாதனைகளை எடுத்துக்கூறி அவர் வாக்கு சேகரிப்பது போல் அவரின் பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகளை விமர்சனம் செய்து மட்டுமில்லாமல், தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி திட்டங்கலை எடுத்துரைத்து அவர் பிரச்சாரம செய்யவுள்ளார். விரைவில் கொங்கு மண்டலத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கவுள்ள முதல்வர் காவிரி டெல்டா பகுதிகள், தென் மற்றும் வட தமிழகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்யவுள்ளார்.

ஆனால், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினோ வீட்டில் இருந்த படி காணொளி மூலம் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வரும் நிலையில்,  நீர் மேலான்மையை கடைபிடித்ததில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு பெருமைப்படுத்தியது. மேலும், நிவர் புயலை கையாண்டது,  இந்தியன் டுடே பத்திரிக்கையும் தமிழகத்தை சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுத்துள்ளது. அதோடு, நிவர் புயலை சரியாக கையாண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி தனது பாராட்டையும் தெரிவித்தார். சமீபத்தில் முதல்வரால் அறிவிக்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.இந்த மினி கிளினிக் திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று என இந்திய மருத்துவ சங்கமே பாராட்டியுள்ளது. 

சாதரண மக்களிடம் எளிமையாக பழகும் குண்டம் கொண்ட முதல்வருக்கு  மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. 

2017ம் வருடம் பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற போது, அவரை யாருக்கும் தெரியவில்லை. எனவே, விரைல் அவரின் ஆட்சி கவிழ்ந்து விடும் என அரசியல் விமர்சகர்களே கூறினர். ஆனால், கடந்த 4 வருடங்களாக அவர் சிறப்பாக ஆட்சி செய்து அதிமுகவையும், அதிமுக தொண்டர்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார். அவரின் நடவடிக்கைகளால் கொரோனா காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. 

ஜெயலலிதா, கருணாநிதி என  2 ஆளுமைகள் இல்லாத சூழ்நிலையிலும் தமிழகம் பல சவால்களை சந்தித்தது. ஆனால், அதை திறமையாக கையாண்டு தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியது முதல்வரின் ஆளுமை என்பதை யாராலும் மறுக்க முடியாது.விரைவில் அவர் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொள்வது அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News