பிரச்சாரத்தை துவங்கிய முதல்வர் - அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் தேர்தல் வருவதால் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து இன்று தனது பிரச்சாரத்தை துவங்கினார்.
அப்போது அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பாகவும், அதிமுக சார்பாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் திறந்த வேனில் நின்றவாறு அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே ஆலச்சம்பாளையம், எட்டி குடைமேடு உள்ளிட்ட 5 பகுதிகளில் அம்மா மினி கிளினுக்குகளை அவர் துவங்கி வைத்தார். முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரத்தை துவங்கியுள்ளது அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ,வழிநெடுக பொதுமக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். வழிநெடுக அவருக்காக பேனர்களும், கொடி தோரணங்களும் கட்டப்பட்டிருந்தது.
பொதுமக்கள் முன்னிலையில் பேசிய பழனிச்சாமி ‘முதலமைச்சர் பதவி எனக்கு கடவுள் அருளால் மட்டுமே கிடைத்தது’ என தெரிவித்தார்.