×

கூட்டணி வேறு ... கொள்கை வேறு....சிறுபான்மையினர் பயம் கொள்ள தேவையில்லை - முதல்வர் பேச்சு..
 

 

சிறுபான்மையினர் பயம் கொள்ள தேவையில்லை என கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழாவில் தமிழக முதல்வர் பழனிச்சாம் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிச்சாமி ‘கிறிஸ்துமஸ் புனித யாத்திரை மேற்கொள்வதற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.20,000-லிருந்து ரூ.37,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல் கூட்டணி வேறு கொள்கை வேறு.. எனவே, அதிமுக தனது கொள்கையை மாற்றிக்கொள்ளது. எனவே, சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை’ என அவர் தெரிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு  சிறுபான்மையினரிடையே நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News