
Cinema News
அப்பாவின் நெகிழ்ச்சியான தருணங்களைப் பார்த்து தான் நான் வளர்ந்தேன்….சொல்கிறார் ஜெயம் ரவி
Published on
தமிழ்சினிமா வரலாற்றில் கலைக்குடும்பமாக உள்ளவர்கள் வெகுசிலர் தான். எடிட்டர் மோகனுக்கு 3 பிள்ளைகள். ஒருவர் மோகன் ராஜா. இவர் பிரபல இயக்குனர்.
அடுத்தவர் ஜெயம் ரவி. இவர் முன்னணி ஹீரோ. அம்மா வரலட்சுமி. இவர் திருக்குறளின் மேல் ஈடுபாடு கொண்டு குறள்களின் எண்ணிக்கையை சுருக்கி வெளியற்ற வேதம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
ஒரு பையனை டைரக்டராகவும், ஒரு பையனை ஹீரோவாகவும் ஆக்கிவிட்டார் தயாரிப்பாளர் எடிட்டர் மோகன்.
இவர்களில் ஒருவர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஒவ்வொருவரும் என்னென்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
எடிட்டர் மோகன்
தொழிலையே தெய்வமாகக் கொண்டு வாழ்ந்து வந்தேன். தனிமனிதம் என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொருவருக்கும் ஒரு உதவியாக அமையும்.
தனி ஒருவன் என்று டைட்டில் வைத்த இந்தப் புக்கை தனி மனிதமாக மாற்றியது மோகன் தான். தெலுங்கில் அவன் முதன் முதலாக இயக்கிய அனுமன் ஜங்ஷன் என்ற படம் 175 நாளைத் தாண்டி ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அப்போதே அவனது திறமை எனக்குத் தெரிந்து விட்டது என்கிறார் எடிட்டர் மோகன். சினிமாக்காரங்கல்லாம் என்ன நினைப்பாங்கன்னா சினிமா எடுக்கறதுதான் முக்கியம்னு நினைப்பாங்க. நான் அது எடுக்கறது மட்டும் முக்கியமல்ல. ஜனங்கக் கிட்ட கொண்டு போய் சேர்க்கறது தான் முக்கியம்னு நினைப்பேன்.
Editor Mohan
பொதுவா படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரும் ரொம்ப களைத்துப் போய் அப்பாட ஒரு பெரிய வேலை முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சு சோர்ந்து உட்கார்ந்துருவாங்க. ஆனா…அதுக்கு அப்புறம் மக்களிடம் அந்தப்படத்தைக் கொண்டு போய் சேர்க்கறதுல தான் அந்தப்படத்தோட வெற்றியே இருக்கு.
ஜெமினி பட நிறுவனம் சந்திரலேகா படத்திற்காக நார்வேயில் கொண்டு போய் பேனரை வச்சாங்க. அங்க அதை பெரிசா எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் வரை விஷயம் பெரிசா போயிடுச்சு. அப்படின்னா அந்தப் படத்திற்கு எந்த அளவு பப்ளிசிட்டி கிடைச்சிருக்கும்னு எண்ணிப்பாருங்க… என்கிறார்.
திரைக்கதையும், எடிட்டிங்கும் சேர்த்து செய்து தமிழ்ப்படங்களில் அசத்தி வருகிறார். இதையும் தாண்டி இவர் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். பன்முகத்திறன் வாய்ந்தவர்.
மோகன் ராஜா
Mohan Raja
இயக்குனர் மோகன்ராஜாவின் படங்கள் அனைத்துமே பிரமாதமாக இருக்கும். வேலைக்காரன், தனி ஒருவன், தில்லாலங்கடி, சந்தோஷ் சுப்பிரமணியம், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி ஆகிய படங்கள் இவருடையவை. இவர் அப்பாவைப் பற்றி என்ன சொல்கிறார் என பாருங்கள்.
அப்பாவின் பன்முகத்திறன் எனக்கு ரொம்ப புதுசாக இருந்தது. சிறுவயதிலேயே எனக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்தினாங்க. ஆங்கிலப்படத்தை எனக்கு ஒவ்வொரு ஷாட் பை ஷாட்டா சொல்லித்தருவாங்க. எடிட்டிங் என்பது மூச்சை சீராக வைத்துக் கொள்வது மாதிரி. அந்த வகையில் அப்பாவிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம்.
அப்பா தான் எனது ஹீரோ. நிஜ வாழ்க்கையிலும் அவர் தான் ஹீரோ. கருப்பு வெள்ளை சினிமா தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே சினிமாவில் பரந்த அறிவு கொண்டவர். நான் சினிமாவில் உள்ள தொழில் நுணுக்கங்களை அவரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். தெலுங்கில் மட்டும் 12 வெள்ளிவிழா படங்களைக் கொடுத்துள்ளார். அங்கு அப்பா தான் சூப்பர்ஸ்டார்.
ஜெயம் ரவி
அப்பா கத்துக்கிட்ட விஷயங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தாரு. தெலுங்கு தயாரிப்பாளர்களில் டாப் 3 வரையில் சென்றுள்ளார். ஜெயம் படத்தில நான் நடிச்சது ஒரு பெரிய விஷயம்.
அந்த இடத்துல என்னை நிக்க வைக்க அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டாருன்னு எனக்குத் தான் தெரியும். படப்பிடிப்பு முடிந்ததும் பட புரொமோஷனுக்காக வைக்கப்பட்ட ஒரு பேனரையை அப்பா நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அந்தப் படத்துல என் பையன் எப்படி நடிச்சிருக்கான். அது எல்லாம் சரியா வந்துருக்கான்னு அந்த பேனரையே ரொம்ப நேரமாக பார்த்துக் கொண்டு இருந்தார். நான் இன்று இந்த அளவு வந்துருக்கேன். அண்ணன டைரக்டரா மாற்றிருக்காரு. இதை விட ஒரு அப்பாவுக்கு வேற என்ன பெரிய விஷயம் இருக்கு?ன்னு கேட்குற அளவுக்கு அவரு எங்களை வளர்த்துருக்காரு.
Vijay TVK: தற்பொது அரசியல் களமே பெரும் பரபரப்பாக இருக்கிறது. கரூர் சம்பவத்தில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்க...
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...