மாஸ்டரை கண்டு பயந்து ஓடிய சுல்தான்.. வீரு கொண்டு வரும் ஈஸ்வரம்... இந்த பொங்கல் செம டிரீட் தான் போங்க!
விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் சுல்தான் ஓடிடியில் வெளியாகும் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் சுல்தான் ஓடிடியில் வெளியாகவில்லையாம். சுல்தானை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
Tue, 29 Dec 2020

மாஸ்டர் வந்தாலும் பரவாயில்லை என்று சுல்தானும் சேர்ந்து வருவார் என்று நினைத்த நிலையில் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியுள்ளது. சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது.
பொங்கலுக்கு மாஸ்டர் வருவதால் பிற நடிகர்களின் படங்கள் எதுவும் வரவில்லை. ஆனால் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. ஈஸ்வரன் ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.