சிம்புக்கு ஆப்பு வைத்த விஜய்... தள்ளி போகும் ஈஸ்வரன்!! என்ன ஆச்சு?
நடிகர் சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தை முடித்த கையோடும், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் முழு வேகத்தில் நடித்து வருகிறார்.
Fri, 18 Dec 2020

இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை பொங்கல் பண்டிகையில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் அப்போது மாஸ்டர் திரைப்படத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனால் ஈஸ்வரன் திரைப்படத்தை வெறும் 100 திரையரங்குகளில் மட்டுமே வெளியிட வாய்ப்புள்ளது, இதன் காரணமாக இப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி சிம்புவின் பிறந்தநாள் ஜனவரி மாதம் இறுதியில் வருவதால் ஈஸ்வரன் படத்தை அப்போது வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.