`சிம்பு மாமா ஐ லவ் யூ’ நித்தியால் சிக்கிய சுசீ... சர்ச்சை வீடியோ

`ஈஸ்வரன்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் சுசீந்திரன், ``சிம்பு மாமா ஐ லவ் யூ" எனச் சொல்லுமாறு படத்தின் நாயகி நித்தி அகர்வாலிடம் கூறியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.
சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள `ஈஸ்வரன்’ படம் தைப் பொங்கலையொட்டி ஜனவரி 14-ம் தேதி வெளியாகிறது. படத்தின் இசைவெளியீட்டு விழா ரசிகர்களின் மத்தியில் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. இவ்விழாவில் நடிகை நித்திஅகர்வால் பேசுகையில்,``சிம்பு ஒரு சிறந்த நடிகர். எனக்குப் பிடித்த நடிகர். அவரோடு பணிபுரிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.சிம்பு வேற லெவலில் ரசிகர்களை கொண்டவர்" எனக் குறிப்பிட்டார்.
அப்போது உடனிருந்த இயக்குநர் சுசீந்திரன்,``சிம்பு மாமா ஐ லவ் யூ" என்று சொல்லுமாறு நித்தி அகர்வாலிடம் கூறினார். இது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையாகியுள்ளது.
விழா மேடையில் நடிகை ஒருவரிடம் இப்படிக் கூற உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு டைரக்டர் என்று ஏகத்துக்கும் ரசிகர்கள் கமெண்டுகளில் கொதித்தனர். இந்தநிலையில், இது குறித்து இயக்குநர் சுசீந்திரன் விளக்கமளித்திருக்கிறார். ``சிம்பு மாமா ஐ லவ் யு"என்பது `ஈஸ்வரன்’ திரைப்படத்தில் வரும் வசனம் மட்டுமே. உண்மையாக அதைச் சொல்லுமாறு நித்தி அகர்வாலிடம் கூறவில்லை. ஈஸ்வரன் படத்தில் நித்தி அகர்வால் கேரக்டர் சிம்புவுக்கு முறைப்பெண் முறை. அந்த கேரக்டரின் வசனமே அது’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனாலும், ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.
sorry but even i feel uncomfortable when i see it...i know its fun but...🤢 #Eeswaran #EeswaranAudioLaunch pic.twitter.com/2kpCROOrxj
— SUJAN (@sujanvj) January 2, 2021