×

மாஸ்டர் குறித்து திடீர் வீடியோ வெளியிட்ட சுசீந்திரன்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

மாஸ்டர் படத்தினை குறித்து ஈஸ்வரன் இயக்குனர் வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 

கொரோனா சிக்கலால் தமிழகமே லாக் டவுனில் இருந்தது. இதில் பெரும் பாதிக்கப்பட்டது தமிழ் திரையுலகம் தான். படப்பிடிப்புகள் மட்டுமல்லாமல் புது படங்களும் பெட்டியில் முடிங்கியது. இதனால், திரையரங்குகள் வருமானம் இல்லாமல் தவித்தது. ஏறத்தாழ 7 மாதத்திற்கு பின்னர் திரையரங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்டது. ஆனால், பெரிய படங்கள் வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் கூட்டமும் வரவில்லை. 

இந்நிலையில், விஜய் நடிப்பில் மாஸ்டர், சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் ஆகிய படங்கள் பொங்கல் தினத்தையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 100 சதவீத இருக்கைக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளை தாண்டி இரண்டு படங்களும் இன்று வெளியாகியது. விஷேச நாட்களில் திரையரங்குகள் செல்வதே ஒரு அலாதி சந்தோஷம் தான். அந்த வகையில், பல நாட்கள் கழித்து திரையரங்குகள் இன்று செம கூட்டமாக காட்சி அளித்தது. 

இதை தொடர்ந்து, சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தை இயக்கியவர் சுசீந்திரன். மாஸ்டர் படத்தை குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், மாஸ்டர் படம் பார்த்தேன். விஜய் சாருக்கு இது ஒரு மாஸ்டர் பீஸ். லோகேஷ் ஸ்கிரீன்பிளே பிரமாதம்.வில்லதனத்தை ரசிக்கிறமாதிரி விஜய்சேதுபதி பண்ணிருக்கிறாரு. அனைவருக்கும் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு இந்த வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 


 

From around the web

Trending Videos

Tamilnadu News