வெளியானது பியார் பிரேமா கல்யாணம் படத்தின் Crazy Love பாடல்!
Aug 6, 2026, 13:32 IST
'பியார் பிரேமா காதல்' படம் மூலம் இளசுகளின் லைக்ஸ் அள்ளியவர் இயக்குநர் இளன். இதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் தான் நடித்திருந்தார்.
இதையடுத்து 'பியார் பிரேமா கல்யாணம்' என்ற படத்தை இயக்கியுள்ளார் இளன். இதை இயக்கியது மட்டுமின்றி இவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இதில் அவருக்கு ஜோடியாக சான்வி மேகனா டூயட் பாடி ஆடியுள்ளார். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் OTT தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இன்று இதன் Crazy Love பாடலை ரிலீஸ் செய்துள்ளனர்.
