ரொமான்டிக் காமெடி படமான பியார் பிரேமா கல்யாணம் ட்ரெய்லர்!

 
Pyaar Prema Kalyanam

'பியார் பிரேமா காதல்' இயக்குநர் இளன் இயக்கியுள்ள புதிய ரொமான்டிக் காமெடி படம் 'பியார் பிரேமா கல்யாணம்'. இவர் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இதில் இளனுக்கு ஜோடியாக சான்வி மேகனா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தினேஷ்.கே.பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல், நேரடியாக OTT தளமான நெட்ஃப்ளிக்ஸில் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகப்போகிறது.

From Around the web